தவளைகளுக்கு கோலாகல திருமணம்: உ.பி.,யில் வினோத நிகழ்ச்சி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், வறட்சியை போக்கி மழைப்பொழிவை வேண்டி தவளைகளுக்கு திருமணம் நடத்தி அப்பகுதி மக்கள் பிரார்த்தனை நடத்தி வழிபட்டனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மழை பொய்த்துபோய், விவசாய நிலங்கள் வறட்சியடைகிறது. இதனால், தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதுபோன்ற காலங்களில், மழை பெய்ய வேண்டும் என சில மதத்தை சேர்ந்த மக்கள் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிப்படுவார்கள்.

அதுபோன்று, உத்தர பிரதேசம் மாநிலத்தில் இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவை வேண்டி வாரணாசி நகரில், இரண்டு பிளாஸ்டிக் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்து அம்மாநில மக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

இந்த திருமணம், இந்து முறைப்படி நிஜ மணமகன், மணமகளுக்கு சீர்வரிசைகளோடு செய்யப்படும் திருமணம் போன்று செய்து வைத்தனர். அதாவது, சீர்வரிசைகளோடும், மேளதாளத்தோடும், பிளாஸ்டிக் தவளைகளை ஊர்வலமாக மணப்பந்தலுக்கு அழைத்து வந்து யாகம் செய்தனர். பின்னர், தவளைகளுக்கு சிறப்பு பூஜை செய்து திருமணம் செய்து வைத்தனர்.

More News >>