அறுவை சிகிச்சைக்காக வந்த நோயாளியின் கிட்னியை திருடிய மருத்துவர்
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில், அறுவை சிகிச்சைக்கா வந்த நோயாளியின் கிட்னியை திருடிய மருத்துவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதசே மாநிலம் முசாபர்நகரில் உள்ள மண்டி பகுதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு, சிறுநீரக கல்நீக்க சிகிச்சைக்காக இக்பால் என்ற 60 வயது முதியவர் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், இவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் மட்டுமே கல் நீக்க முடியும் என்று அதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்தனர். ஆனால், அறுவை சிகிச்சையின்போது மருத்துவர் விபு கார்க் என்பவர் நோயாளிக்கு தெரியாமல் கிட்னியை திருடி உள்ளார். இதனை அறிந்த இக்பாலின் உறவினர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக, மருத்துவர் விபு கார்க் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியது.