உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வீழ்த்தி கொலம்பியா வென்றது

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போலந்துக்கும் கொலம்பியாவுக்கும் இடையே போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் கொலும்பியா அணி வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தினமும் நடைபெற்று வரும் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று எச் பிரிவில் இடம்பெற்றுள்ள போலந்து மற்றும் கொலம்பியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியது முதல் கொலம்பியா அணி சிறப்பாக ஆடி வந்த நிலையில் ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் யெரி மினா ஒரு கோல் அடித்தார்.

இதன் மூலம், முதல் பாதியில் கொலும்பியா மற்றும் போலந்து அணிகள் 1-0 என்ற கோல் கணக்கை அடைந்தது. தொடர்ந்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கொலம்பியா அணியின் ராடமல் பால்கோ 70வது நிமிடத்தில், ஜூவான் குவாட்ராடோ 75வது நிமிடத்திலும்தலா ஒரு கோல் அடித்தனர். ஆனால், போலந்து அணி முதல் மற்றும இரண்டு பாதி ஆட்டங்களிலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இதன்மூலம், 3-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணி வெற்றிப்பெற்றது. இருப்பினும், எச் பிரிவில் விளையாடிய ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றதால், கொலம்பியா மற்றும் போலந்து அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின.

More News >>