மக்கள் சட்டத்துக்கு உட்பட்டு போராடலாம்!- அமைச்சர் ஜெயக்குமார்
'சட்டத்துக்கு உட்பட்டு மக்களுள் யாரும் போராடலாம்’ என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை நடுக்குப்பத்தில் நவீன மீன் அங்காடியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “ஜனநாயகத்தில் சட்டத்தின் படி குடிமக்கள் நடந்து கொள்ள வேண்டும் சட்டத்துக்குட்பட்டு போராட்டம் நடத்துவதை ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ளலாம் பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட கடமைகளை போலீஸார் சரியாக ஆற்றி வருகின்றனர்” எனக் கூறினார்.
மேலும் நவீன மீன் அங்காடி குறித்துப் பேசுகையில், “நவீன மீன் அங்காடி சுகாதாரமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. எளிய மக்களுக்கும் சுகாதாரமான மீன்கள் கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்” எனக் கூறியுள்ளார்.