டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் - தேதிகள் அறிவிப்பு!
குரூப் 1 உள்ளிட்ட 11 வகையான தேர்வுகளின் முடிவுகள் வெளியாகக்கூடிய அட்டவணையை, டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
துணை ஆட்சியர், டிஎஸ்பி, மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட 85 உயர் பதவிகளை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வு, கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது.
இதில் தகுதி பெற்ற 4 ஆயிரத்து 802 பேருக்கு, கடந்த ஆண்டு அக்டோபரில் மெயின் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் 7 மாதங்களாக வெளியிடப்படாமல் உள்ள நிலையில், வரும் செப்டம்பர் கடைசி வாரத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
அத்துடன், வேளாண் துறை உதவி பொறியாளர், சுற்றுலா அலுவலர், இந்து அறநிலையத்துறையில் செயல் அலுவலர் உள்பட 10 வகையான தேர்வுகளுக்கான முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு என அடுத்தடுத்த பணிகள் குறித்த அட்டவணையையும், டி.என்.பி.ஸ்.சி. வெளியிட்டுள்ளது.