ப.சிதம்பரம் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜர்!

வெளிநாட்டு சொத்துக்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினருடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வாங்கிய சொத்து விவரங்கள் குறித்து வருமான வரி கணக்கில் காட்டவில்லை என புகார் எழுந்தது.

இதற்கு ப.சிதம்பரம் குடும்பத்தினர் விளக்கம் அளித்த நிலையிலும், கறுப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை புகார் மனு அளித்தது.

மனுவை விசாரணைக்கு ஏற்ற எழும்பூர் குற்றவியல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்விழி, குற்றம்சாட்டப்பட்ட நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேரையும் ஜூன் 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

அதன்படி, ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

More News >>