ஸ்டெர்லைட் ஆலை உள்ளே எங்களுக்கு அனுமதியில்லை- வேதாந்தா விளக்கம்
ஸ்டெர்லைட் ஆலைக்குள் வேதாந்தா நிறுவனத்தாருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனத்தார் விளக்கம் அளித்துள்ளனர்.
தூத்துக்க்டியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டுக் கொலை செய்த பின்னர் தமிழக அரசு இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு தொகையும், ஒரு வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள அமிலக் கிடங்கில் கசிவு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படி ஏதும் இல்லை என்றும் விரைவில் ஆய்வு நடத்துவதாகவும் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்தார்.
இதன் அடிப்படையில் நடந்த ஆய்வில் ஸ்டெர்லை ஆலையில் அமிலக் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அமிலக் கழிவுகள் மாநகர நிர்வாகம் சார்பில் நீக்கப்பட்டு வருகிறது.
இதுவரையில் 2ஆயிரம் லிட்டர் வரையிலான அமிலக் கழிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விளக்க அறிக்கையில் வேதாந்தா நிறுவனம், “வேதாந்தா நிறுவனத்தாருக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமிலக் கசிவு குறித்தத் தகவல் கிடைத்ததுமே மாநக்ர நிர்வாகத்தாரிடம் தெரிவித்துவிட்டோம். மேலும் அமிலக் கசிவிலிருந்து கூடுதல் அபாயங்கள் நேராமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.