லண்டனில் பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை!

இந்தியாவைச் சேர்ந்த யோகா குரு பாபா ராம்தேவுக்கு லண்டனில் இருக்கும் மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது.

இது குறித்து பாபா ராம்தேவ், அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் அவர், ‘முதன் மறையாக லண்டனில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஒரு யோகியின் மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது.

யோகாவுக்கு இது மேலும் பெருமை சேர்க்கும். யோக வாழ்வியலை உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் சுவிகரித்துக் கொள்ள இது நல்ல வாய்ப்பாக இருக்கும்’ என்று கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் யோகா குரு பாபா ராம்தேவிடம், அவரது மெழுகு சிலையை வைக்க அனுமதி கேட்டது லண்டன் துஸாட்ஸ் அருங்காட்சியகம்.

அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டதற்கிணங்க சிலையை வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், ஷாருக் கான், சல்மான் கான், ஐஸ்வர்யா ராய், கத்ரினா கயிஃப் உள்ளிட்டோரின் மெழுகு சிலைகள் இருக்கின்றன.

துஸாட்ஸ் அருங்காட்சியகம், கடந்த ஆண்டு டெல்லியில் அதன் கிளையைத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இருக்கும் அருங்காட்சியத்திலும் ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்களின் மெழுகு சிலைகளும், சில அரசியல்வாதிகளின் மெழுகு சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

More News >>