சர்கார் உரிமை எங்களுக்கு தாருங்கள்: ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
By Isaivaani
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் 3 வது முறையாக இணைந்துள்ள திரைப்படம் "சர்கார்". விஜய்-ன் 62வது படமாக வளர்ந்துள்ள இப்படம் முழுக்க முழுக்க தற்போதைய அரசியல் பற்றி பேசும் படமாக இருக்கும் என தகவல்கள் கசிந்துள்ளன.
முதலில் படத்தின் பெயரை வெளியிடாமல் 80%திரைப்படம் முடிந்த நிலையில் தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21ன் தேதி பிறந்தநாள் பரிசாக படத்தலைப்பை சர்கார் என வெளியிட்டது. "சர்கார்" தலைப்பை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
இறுதி கட்டத்தை எட்டியுள்ள சர்கார் படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் தமிழகத் திரையரங்க உரிமையை வாங்க ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சர்கார் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான 'மெர்சல்' திரைப்படத்தை தயாரித்து நல்ல லாபத்தை பார்த்தது ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம். மேலும் விஜயின் அடுத்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.