மெக்ஸிகோ வெற்றி கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி சூடு: 15 பேர் பலி

தென்கொரியா-மெக்ஸிகோ அணிகள் மோதிய உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சனிக்கிழமை அன்று ரஷ்யாவில் நடைபெற்றது. இரு அணிகளும் ஆடிய போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

கடைசியில் மெக்ஸிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றியை மெக்ஸிகோ மக்கள் வீதிகளில் கொண்டாடி கொண்டிருந்த நிலையில், டெக்சாஸ் நகரில் உள்ள ஒரு கார் ஷெட்டில் இருந்த 6 நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

விசாரணையில், அந்த 6 நபரும் மெக்ஸிகோ அணி தென் கொரிய அணியை வீழ்த்தியதற்காக வெற்றியை கார் ஷெட்டில் கொண்டாடினர். அங்கு வந்த சிலர் திடீரென துப்பாக்கியால் 6 பேரையும் சுட்டுத்தள்ளினர்.

மற்றுமொரு இடத்தில் கால்பந்தாட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். அங்கும் இதே போல் வந்த மர்ம கும்பல் அங்கிருந்த 5 நபர்களை சுட்டுத்தள்ளினர். மேலும் அன்றிரவு 4 நபர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மெக்ஸிகோ அணி வெற்றி பெற்ற ஒரே நாளில் சுமார் 15 நபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இருவர் மட்டுமே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.

More News >>