சிகாகோ: சிக்கியது 680 கிலோ கஞ்சா!
கடந்த சனிக்கிழமை, அமெரிக்காவின் சிகாகோ நகரில் வாகன சோதனையின்போது மோப்பநாயின் உதவியுடன் 1500 பவுண்ட் (ஏறக்குறைய 680 கிலோ) கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதன் சந்தை மதிப்பு 10 மில்லியன் டாலர் (ஏறக்குறைய 68 கோடி) இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகாகோவிலிருந்து கலிபோர்னியாவுக்கு சென்று கொண்டிருந்த வாகனத்தை போதை பொருள் தடுப்பு சோதனைக்காக காவல்துறையினர் நிறுத்தினர்.
மோப்பநாயின் உதவியுடன் நடந்த இந்த சோதனையின்போது, நாய் தடைசெய்யப்பட்ட பொருள் காரினுள் இருப்பதை காட்டிக்கொடுத்தது.
காவல்துறையினர் விசாரணையின்போது, 680 கிலோ கஞ்சா கடத்தப்படுவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த கலிபோர்னியா, லேக்ஹெட்டை சேர்ந்த ஜேசன் டனர் (வயது 42) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.