காதலை எதிர்த்ததால் மதுவில் விஷம் கலந்தேன்: பெண் அதிர்ச்சி வாக்குமூலம்
தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மதுவில் விஷம் கலந்தேன் என்று கொலை செய்யப்பட்ட முருகனின் சகோதரி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
சிவகாசி முத்தாட்சி மடத்தை சேர்ந்வர் முருகன். இவரது சகோதரி வள்ளி. திருமணமான இவர், கருத்துவேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இதற்கிடையில், அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் வள்ளிக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இது, வள்ளியின் அண்ணன் முருகனுக்கு தெரியவந்ததை அடுத்து அவர் கண்டித்துள்ளார். மேலும், வள்ளி செல்வத்தை திருமணம் செய்துக் கொள்வதற்கும் முருகன் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதற்கிடையே, முருகன் தனது நண்பர்களான கணேசன், ஜம்பு, கவுதம், முகமது இப்ராஹிம், சரவணன், அந்தோஜி ராஜ், ஹரிஹரன் என மொத்தம 8 பேர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் பகுதியில் மது குடித்துள்ளனர். பின்னர், இதில் சிலர் வீடு திரும்பினர். மீதமுள்ளவர்கள், மது போதை தலைக்கு ஏறி இங்கேயே படுத்துவிட்டனர்.
இந்நிலையில், முருகன், இப்ராஹிம், கணேசன் ஆகிய நான்கு பேர் நுரை தள்ளிய நிலையில் இறந்துக்கிடந்தனர். மேலும், வீட்டிற்கு சென்ற நான்கு பேருக்கும் வாந்தி வந்து மயக்கம் அடைந்தனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நான்கு பேர் மரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், முருகனின் சகோதரி வள்ளி மற்றும் அவரது கள்ளக் காதலன் செல்வம் ஆகியோர் திட்டமிட்டு மதுவில் விஷம் கலந்து கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து, வள்ளியிடம் நடத்திய விசாரணையில் பகீர் வாக்குமூலம் அளித்தார். மேலும், மதுவில் விஷம் கலந்தது எப்படி உள்ளிட்ட கிடுக்கிப்பிடி கேள்விகளை போலீசார் வள்ளியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.