மும்பையில் கனமழை எதிரொலி: நிலச்சரிவில் சிக்கி ஏராளமான கார்கள் நாசம்
மும்பையில் பலத்த மழை பெய்து வருவதால், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான கார்கள் நாசமடைந்தன.
தென்மேற்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வட மாநிலங்களில் இன்னும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்தது.
அதன்படி, குறிப்பாக மும்பையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் எதிரொலியாக, நேற்று அதிகாலை 4 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பார்க்கிங் பகுதி இடிந்து சரிந்தது. இதில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் சிக்கி பலத்த சோமடைந்துள்ளன.
இந்த கார்களை, கிரேன் மூலம் மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கனமழை எதிரொலியால் மும்பை வாசிகளின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் அவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாகியது.