கடல் சீற்றம்... வீடுகள் சேதம்... மீனவர்கள் வேதனை
சென்னை பட்டினப்பாக்கத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பால் 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்திருப்பதாக மீனவப் பெண்கள் வேதனை தெரிவித்தனர்.
பட்டினப்பாக்கத்தில் உள்ள சீனிவாசபுரம் கடற்கரையேரமாக சுமார் 500மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடல்சீற்றம் காரணமாக இங்குள்ள வீடுகள் கடலில் அடித்து செல்லபடும் சூழல் வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில் கடல் சீற்றத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
இதன் காரணமாக வீடுகள் சேதம் அடைவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 15க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
தங்களது உடமைகள் கடலில் அடித்து செல்லப்பட்டதாக கவலை தெரிவிக்கும் மீனவர்கள், உயிர் பயத்துடன் இங்கு வசித்து வருவதாக தெரிவிக்கின்றனர். உடனடியாக, தமிழக அரசு மீனவர்களுக்கு இலவச வீடுகள் வழங்க முன்வர வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.