எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
தமிழக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்டதும், தினகரனின் ஆதரவாளர்களான எம்எல்ஏக்களான 18 பேரும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து, இந்த 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டு சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு எதிராக, பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை முடிந்த நிலையில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டார்.
ஆனால், மற்றொரு நீதிபதியாக சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என உத்தரவிட்டுள்ளார். இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பும் மாறுபட்டு இருந்ததால், விரைவில் 3வது நீதிபதி நியமிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.
இந்நிலையில், ஓ.பி.எஸ் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தினகரன் ஆதரவு தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.