அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக தீர்மானம்

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து, தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், முதலமைச்சர் பழனிசாமி, இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அப்போது, மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவில்,தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் வகையிலான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதாக முதலமைச்சர் பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.   தற்போதைய நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தில் உள்ள 4 அணைகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். எனவே, மாநிலங்கள் இடையே ஒரு மித்த கருத்து ஏற்படும் வரை, மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தினார். முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்தது.   எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் மசோதாவை ஆதரித்து பேசினார். இதையடுத்து, முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் , சட்டப்பேரவையில் நிறைவேறியது.
More News >>