ஆயுதக் குவியல் கண்டெடுப்பு.. பாதுகாப்பாக அழிக்க திட்டம்..
By Radha
ராமேஸ்வரம் அருகே கண்டெக்கப்பட்ட ஆயுதக்குவியலை, பாதுகாப்பாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கச்சிமடத்தை அடுத்த அந்தோணியார்புரம் கடற்கரை பகுதியில், மீனவர் எடிசன் என்பவரது வீட்டில், கழிவுநீர் தொட்டி அமைக்க குழி தோண்டும் பணி நடந்தது. அப்போது, 4 அடி ஆழத்தில் சிக்கிய இரும்பு பெட்டியை திறந்து பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதில், நவீன ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் தோட்டாக்கள், கண்ணி வெடி மற்றும் ராக்கெட் லாஞ்சர் ஆகியவை இருந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையிலான போலீசார் குழு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டது.
கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் 1970ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. திருவாடானை குற்றவியல் நடுவர் மன்ற மாஜிஸ்திரேட் பார்வையிட பின்னர், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பாதுகாப்பான முறையில் ஆயுதங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.