ஷாருக்கான் தயாரிப்பில் முதல் முறையாக நடிக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்

ஷாருகான் ரெட்சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். பெரும்பாலும் ஷாருகான் நடிக்கும் படங்களை அவரின் இந்த ரெட்சில்லிஸ் நிறுவனம் பெயரில் அவரே தயாரித்து வெளியிடுவார். ஜான் அபரஹம், அஜய் தேவ்கன், போன்ற நடிகர்களும் இவரின் ரெட்சில்லிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது ஒரு ஆச்சர்யமான செய்தி வெளிவந்துள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ள "பட்லா" என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் ஷாருகான். ஷாருகானின் தயாரிப்பில் முதன் முறையாக நடிக்கவுள்ளார் அமிதாப்பச்சன்.

சுஜய் கோஷ் இயக்கும் பட்லா படத்தில் அமிதாப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். உடன் டாப்ஸியும் நடிக்கிறார். ஏற்கனவே பிங்க் என்ற திரைப்படத்தில் டாப்ஸி அம்பிதாபச்சனுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>