ஓ.எம்.ஆர். சாலை சுங்கச்சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு
சென்னையின் ஓ.எம்.ஆர்.சாலை, பெருங்குடி, துரைப்பாக்கம், ஈ.சி.ஆர். சாலை மேடவாக்கம், நாவலூர் என 5 முக்கிய சாலைகளில் சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. சுங்கச்சாவடி கட்டணங்களை தமிழக அரசு மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளது. அதில் சுமார் 10% ஏற்றம் இருக்கும். கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஆட்டோவுக்கு - மாற்றமில்லை, கார்களுக்கு - 25 ரூபாயிலுருந்து 27 ஆக உயரும். சென்று வர 50-லிருந்து 54 ஆகவும் உயரும். பலமுறை சென்றுவர 80 லிருந்து 90 ஆகவும் உயரும். மாதாந்திர கட்டணம் 1950 லிருந்து 2150 ஆகவும் உயரும்.
சரக்கு வாகனங்கள் - ஒருமுறை பயணிக்க 97 லிருந்து 107 ஆக உயரும். சென்றுவர 180லிருந்து 200 ஆக உயரும். ஒருநாளைக்கு பலமுறை பயணிக்க 280லிருந்து 300 ஆக உயரும். மாதாந்திர கட்டணமாக 6850 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓ.எம்.ஆர் சாலைகளில் ஐ.டி நிறுவனங்கள் நிறைய உள்ளதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.