திகார் சிறையில் கைதிகளுக்கு கைத்தொழில் பயிற்சிகள்

டெல்லியில் உள்ள திகார் சிறையில் கைதிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு, கைத்தொழில் பயிற்சிகள வழங்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள மத்திய சிறையாக திகார் சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பல்வேறு குற்றங்களின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறை தண்டனை அனுபவித்து வெளியில் செல்லும் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், அவர்களுக்கு கைத்தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, ஊறுகாய், கேக், பிஸ்கெட் போன்ற உணவு வகைகள் தயாரிப்பது. எல்இடி விளக்குகள் தயாரிப்பது, ஆடை வடிவமைப்பு, போர்வைகள், சட்டைகள் தயாரிப்பு, பேப்பர் மற்றும் மரச்சாமன்கள் தயாரிப்பது உள்ளிட்ட கைத்தொழில்களுக்கான பயிற்சிகள் பெற்று செய்து வருகின்றனர். இவர்கள் தயாரிக்கப்படும் பொருட்கள், டெல்லியில் உள்ள பல்வேறு கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த பயிற்சிக்காக திகார் சிறையில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அறை கட்டப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைத் தொழில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

More News >>