உலகக்கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றுக்கு அர்ஜெண்டினா தகுதி

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று விளையாடிய போட்டியில் நைஜீரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு அர்ஜெண்டினா முன்னேறியது.

ரஷ்யாவில், உலகக்கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றன. முதல் லீக் போட்டியில் பெரு அணி வென்றது. இரண்டாவது லீக் போட்டியில் டென்மார்க், பிரான்ஸ் அணிகள் டிராவில் முடித்தனர். மூன்றாவதாக லீக் டி பிரிவில் இடம்பிடித்துள்ள அர்ஜெண்டினா, நைஜீயா அணிகள் மோதின.

இரு அணிகள் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்த நிலையில், ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் மெஸ்சி சிறப்பாக விளையாடி ஒரு கோல் அடித்தார். இதனால், ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இதன் பிறகு, முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலையில் உள்ளது.

தொடர்ந்து, இரண்டாவது பாதியில், 51வது நிமிடத்தில் நைஜீரியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட நைஜீயா வீரர் விக்டர் மோசஸ் கோல் அடித்தார். இதனால், ஆட்டம் சமமானது. பின்னர், 87வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மார்கஸ் ரோஜோ கோல் அடித்தார். இதன் மூலம், அர்ஜெண்டினா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆனால், இதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்காததால், அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது. இதன்மூலம், அர்ஜெண்டினா அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றது.

More News >>