திமுக உடன் மறைமுக உறவா?- மறுக்கும் அமைச்சர் ஜெயக்குமார்

"அதிமுக மற்றும் திமுக இடையே மறைமுக உறவு உள்ளது என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக மற்றும் அதிமுக இடையேயான உறவு முறை குறித்து மத்திய இணை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் விளக்குகையில், “அதிமுக மற்றும் திமுக இடையே மறைமுக உறவு உள்ளது என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அது முற்றிலும் தவறான கருத்து ஆகும். எங்களுக்கு அரசியல் ரீதியான ஒரே எதிரி திமுகதான். அதனுடன் எந்த கூட்டணியும் இல்லை, மறைமுக உறவும் இல்லை. கடவுள் பக்தி விவகாரத்தில் திமுகவின் கொள்கை என்ன என தெரியவில்லை.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றதால் மஜக தலைவர் குமாரசாமி கர்நாடகாவின் முதல்வர் ஆனார். இதையடுத்து தானும் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றால் மட்டும் முதல்வர் ஆகிவிடலாம் என ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

 

More News >>