ஈரானுடன் வர்த்தகம் வேண்டாமே!- இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை

ஈரானின் செயல்பாடுகள் மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் அடக்கி வைக்கப்பட வேண்டும் என ஈரான் உடனான எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை வைத்துள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நடந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக, தற்போது தன் தோழமை நாடுகளுக்கு சில வேண்டுகோள்களை அமெரிக்கா விடுத்து வருதவதாக கூறப்படுகிறது. ‘மத்திய கிழக்கு பகுதியில் ஈரானின் செயல்பாடுகளை கண்டிக்க வேண்டும்’ என்பதற்காக அமெரிக்கா இந்த புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஈரானின் வருவாய்க்கு முடக்குப் போடுவதற்கு இரு நாடுகளும் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் ஏதுவாக இருக்கும் என்பதற்காக இந்த கோரிக்கை எழுப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அடுத்த வாரம் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு செல்ல உள்ளனர். பயணத்தின் போது, அவர்கள் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை மற்றும் ராணுவத் துறை அமைச்சர்களை சந்திப்பர் என்று எதிர்பார்க்கப்பகிறது. 

More News >>