இடையில் நான்...! - கவிதை
காயத்ரி எழுதியுள்ள ‘இடையில் நான்’ என்ற கவிதை... அவர் வாழ்வில் எதிர்கொண்ட சாவால்களில் இருந்தும், அவரின் எதிர்பார்ப்பிலிருந்தும் மலர்ந்துள்ள வரிகளாக இருக்கின்றன... இது காயத்ரிக்கு மட்டுமல்ல நம் காலத்து மனிதர்கள் அனைவரின் குரல், அதை அவர் கவிதையாக வடித்துக் கொடுத்துள்ளார்....
இடையில் நான்...!
பகுத்தறியும் மதிக்கும் அதை வெல்ல துடிக்கும் விதிக்கும் - இடையில் நான்
கனவுகளுக்கும் கடமைகளுக்கும் - இடையில் நான்
ஆசைகளுக்கும் தேவைகளுக்கும் - இடையில் நான்
பொய்யான வார்த்தைகளுக்கும் மெய்யான மௌனங்களுக்கும் - இடையில் நான்
வெற்றியின் போதையில் வீழ்ந்திடாமலும் தோல்வியின் துயரத்தில் தொலைந்து விடாமலும் - இடையில் நான்
இவை இரண்டையும் பெற முடியாமல்..
ஒன்றையாவது தக்கவைத்துக்கொள்ள துடிக்கும் இதயங்களில் ஒன்று நான்.....!
- காயத்ரி