போலீசிடம் சிக்கிய நடிகர் ஜெய்க்கு வழங்கப்பட்ட விநோத தண்டனை
நடிகர் ஜெய் அதிக சத்தத்துடன் இயங்கக்கூடிய காரை ஓட்டிச் சென்றபோது அவரை போலீசார் மடக்கிப் பிடித்து வித்தியாசமான தண்டனையை வழங்கி உள்ளனர்.
நடிகர் ஜெய் மது குடித்துவிட்டு கார் ஓட்டி பல முறை போலீசாரிடம் சிக்கி உள்ளார். இதுபோன்று, மது குடித்துவிட்டு போதை தலைக்கு ஏறிய நிலையில் நடிகர் ஜெய் கார் ஓட்டி சென்றுக் கொண்டிருந்தபோது அடையாறு பகுதியில் விபத்து ஒன்றை ஏற்படுத்தினார். இதுதொடர்பாக ஜெய்க்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆறு மாதங்கள் வரை கார் ஓட்ட ஜெய்க்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று இரவு பெரிய மேட்டு பகுதியில் தனது காரை அதிக இரைச்சலும் ஜெய் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய போலீசார் மக்கள் அதிகம் நடமாடும், மருத்துவமனைகள் உள்ள பகுதியில் இதுபோன்ற இரைச்சலுடன் கூடிய வாகனத்தை ஓட்டலாமா ? பிரபலமானவராக இருந்துக் கொண்டு இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா என்றும் போலீசார் கேட்டனர். மேலும், ஜெய்க்கு சில அறிவுரைகளும் கூறப்பட்டுள்ளது.
போலீசாரின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட ஜெய், அதற்காக வருத்தம் தெரிவித்தார். பின்னர், ஜெய்க்கு தண்டனை கொடுக்கும் விதமாக, அவரை வைத்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் எடுக்க வைத்தனர்.
அந்த வீடியோவில், “இது என்னுடைய கார் தான். இதுபோல், அதிக இரைச்சலுடன் காரை ஓட்டினால் உங்களை காரை போலீசார் சீஸ் செய்துவிடுவார்கள். எனவே, அதிக இரைச்சலை உருவாக்கும் கருவியை காரில் இருந்து எடுத்து விடுங்கள். பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்” என்றார். இந்த வீடியோ இணையத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.