8 வழிச்சாலைகளை தொடர்ந்து 6 வழிச்சாலை: ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு
சென்னை - சேலம் பசுமை 8 வழிச்சாலை அமைப்பதற்கு அம்மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 6 வழிச்சாலை விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை - சேலம் பசுமை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதைதொடர்ந்து, தமிழகத்தில் மதுரை - தஞ்சாவூர் இடையே மேலும் ஒரு 8 வழிச்சாலை அமைய உள்ளதாக சட்டமன்றத்தில் நேற்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்துள்ளார்.இதன் பிறகு, திண்டுக்கல் - பொள்ளாச்சி இடையே 6 வழி சாலை திட்டத்திற்கு நிலம் கைப்பற்றும் பணி நடந்து முடிந்துவிட்டது என்றும், சாலை போடும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சாலை அமைக்க நிலம் கொடுப்பவர்களுக்கு புதிய நில எடுப்பு சட்டத்தின்படி இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.