அரசியல் ஆதாயத்துக்கு மட்டுமே போராட்டங்கள்!- முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து இன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அவர், ‘2017 ஆம் ஆண்டில் மட்டம் தமிழகத்தில் 31,269 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் நடக்கும் அனைத்து போராட்டங்களிலும் 15 சதவிகிதம் தமிழகத்தில் நடக்கிறது.
சராசரியாக ஒரு நாளைக்கு 47 போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், மத அமைப்புகள் போன்றவையே பெரும்பான்மையான போராட்டங்களில் ஈடுபடுகின்றன.
இந்தப் போராட்டங்களின் எண்ணம் மக்கள் நலனுக்காக நடத்தப்படுவிதில்லை. அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே நடைபெறுகின்றது’ என்று குற்றம் சாட்டினார்.