பிரபல பாப் பாடகர் மைக்கல் ஜாக்சனின் தந்தை மரணம்
பிரபல பாப் இசை ஜாம்பவான் மைக்கல் ஜாக்சனின் தந்தை ஜோசப் ஜாக்சன் நேற்று மரணமடைந்தார்.
பாப் இசை பாடகர் மைக்கல் ஜாக்சனின் பாடல் மற்றும் நடனத்திற்காக உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அமெரிக்கப் பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர் என பன் முகங்களை கொண்ட மைக்கல் ஜாக்சன் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அன்று உயிரிழந்தார்.
இதன் பிறகு, மைக்கல் ஜாக்சனின் தந்தையான ஜோசப் ஜாக்சன் (89) லாஸ் வேகாஸ் என்ற நகரில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர், கடந்த பல ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், ஜோசப் ஜாக்சன் நேற்று மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார்.