7 பிறவியா 7 நிமிஷம் கூட வாழ முடியாது: மனைவிகளால் அலறும் கணவன்கள்

மகாராஷ்டிராவில் வத் பூர்ணிமா தினத்தை முன்னிட்டு, மனைவிகளே வேண்டாம் எங்களை அவர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்று பல்வேறு வேண்டுதல்களுடன் மனைவிகளால் கைவிடப்பட்ட கணவன்கள் சங்கத்தினர் சிறப்பு பூஜை நடத்தினர்.

வட மாநிலங்களில் பிரபல பண்டிகைகளில் ஒன்று வத் பூர்ணிமா. இந்த தினத்தில், மனைவிகள் தனது கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும், ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கே கணவனாக வரவேண்டும் என்றும் ஒரு நாள் முழுக்க கணவனுக்காக விரதம் இருந்து பூஜை நடத்தப்படும். இந்த வத் பூர்ணிமா பண்டிகை நேற்று வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு பெண்கள் சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர்.

ஆனால், மகராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் நகரில், மனைவிகளுக்கு எதிராக அவர்களிடம் இருந்து விடுதலை கோரி ஆண்கள் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். மனைவிகளால் கைவிடப்பட்ட கணவன்கள் சங்கம் சார்பில் இந்த பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள், அரச மரத்தில் இடது புறமாக சுற்றியபடி நூலை கட்டி மனைவிகளுக்கு எதிராக வழிப்பட்டனர்.

இதுகுறித்து பூஜையில் ஈடுபட்ட ஆண்கள் சிலர் கூறுகையில், “பெண்களுக்கு பாதுகாப்பு சட்டங்கள் உள்ளன. அவற்றை மனைவிகள் தவறாக பயன்படுத்தியும், பிளாக்மெயில் செய்தும் மிரட்டுகிறார்கள். தொல்லைப்படுத்தி வருகிறார்கள். மீறி அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் பல லட்சங்கள் செலவாகிறது.

எனது வீட்டில் சமைப்பது முதல் அனைத்து வேலைகளையும் நானே செய்துக் கொள்கிறேன். அப்படி இருக்கும்போது மனைவி எதற்கு ? தேவையே இல்லை. மனைவியின் முகத்தில் முழிக்கக்கூட பிடிக்கவில்லை. ஏழு ஜென்மன் என்ன ஏழு நிமிடங்கள் கூட மனைவியுடன் என்னால் வாழவே முடியாது” என்று கணவன்கள் அலறுகின்றனர். இந்த வினோத நிகழ்வு, அனைவரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

More News >>