பொறியியல் படிப்பு... தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்டார்.

தமிழகம் முழுவதும் உள்ள 509 கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,78,129 இடங்களில் சேருவதற்கு 1,59,631 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

அதில், 1,10,000 பேருக்கு மட்டுமே ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டன. அவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்டார்.

கீர்த்தனா ரவி உள்பட 10 மாணவர்கள் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்று, முதல் பத்து இடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தரவரிசைப்பட்டியலில் ஏதேனும் பிழைகள் இருந்தால், அதில் ஒரு வாரத்திற்குள் திருத்திக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

பொறியியல் படிப்பு சேர்க்கைகான கலந்தாய்வு ஜூலை 10-ஆம் தேதிக்கு மேல் தொடங்கும் எனவும் ஜூலை 30-க்குள் கலந்தாய்வை முடிக்க முடியாது என்பதால், காலக் கெடுவை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியிருப்பதாகவும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>