மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல்!
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் நீட் தேர்வின் அடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 3,393 எம்.பி.பி.எஸ் இடங்கள், 1,198 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
ஏற்கப்பட்ட 27,417 விண்ணப்பங்களில் மாணவிகளின் எண்ணிக்கை 17,593 பேர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதில், சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். தர்மபுரியைச் சேர்ந்த ராஜ் செந்தூர் 656 மதிப்பெண் பெற்று 2-ஆவது இடம் பெற்றுள்ளார். சென்னையை சேர்ந்த பிரவீண் 644 மதிப்பெண்கள் பெற்று 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 1-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளாத 3 தனியார் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.