ரயில் நிலையங்களுக்கு தீவிரவாதத் தாக்குதல் எச்சரிக்கையா?

இந்தியாவின் வடக்கு ரயில்வே துறை, ‘தீவிரவாதிகளுக்கு ரயில்களை கவிழ்க்க திட்டம் உள்ளது. அதனால் கூடுதல் கவனம் வேண்டும்” என அதிர்ச்சிகர சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

இதனால், ரயில்வே துறையின் மூத்த அதிகாரிகள் பதற்றமடைந்துள்ளனர். உண்மை என்னவென்றால், மே மாதமே இந்த சுற்றறிக்கை ரயில்வே நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது. தற்போது, மீண்டும் அதே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது தான் பதற்றத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்புப் படை, தீவிரவாத அமைப்புகள் ரயில்களைக் கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே துறையை கடந்த மாதம் எச்சரித்தது. அப்போதே, இது குறித்து சம்பந்தப்பட்ட நிலையங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இது விவகாரம் பற்றி டெல்லி மண்டலத்தின் டிவிஷனல் மேலாளர் ஆர்.என்.சிங், ‘முன்னரே அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தான் மீண்டும் தற்போது அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு ஜூனியர் அதிகாரி அவசரப்பட்டு இப்படிப்பட்ட சுற்றறிக்கையை அனுப்பிவிட்டார். யாரும் இதனால் பதற்றப்பட வேண்டாம். ரயில்வே நிலையங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார். 

More News >>