இமாச்சலில் கொடூரம்: அழுகிய நிலையில் பெண் சடலங்கள் மீட்பு
இமாச்சல் பிரதேசகத்தில், இரண்டு கைகளும் கட்டப்பட்டு, அழுகிய நிலையில் கிடந்த இரண்டு பெண் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிராக குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில் உலகளவில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில், முதல் இடத்தில் இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வு முடிவு உண்மை என்று நிரூபிக்கும் வகையில், இமாச்சல பிரதேசத்தில், இரண்டு பெண்களின் கைகள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் சடலங்கள் இருப்பதை போலீசார் கண்டுப்பிடித்துள்ளனர்.
அப்பெண்களின் முகம், அழுகி சிதைந்து இருப்பதால், அடையாளம் கண்டுப்பிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அப்பெண்களின் வயது 25 முதல் 30 வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.