மும்பையில் அடுக்குமாடியில் மோதிய விமானம்! 5 பேர் பலி

மும்பையில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான காத்கோபர் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.   இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வந்துள்ளது. காத்கோபர் பகுதியில், புதிதாக கட்டி வரும் கட்டடத்தில் விமானம் மோதியுள்ளது. அந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் விமானநிலையத்தில் தான், விமானம் தரையிறங்க இருந்தது.   ஆனால், எதிர்பாராத விதமாக விமானம், மக்கள் வசிப்பிடத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. விபத்தான விமானம், பீச்கிராஃப்ட் சி 90 டர்போப்ராப், சிறிய ரக விமானம் என்று அறியப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு, உத்தர பிரதேச அரசாங்கம் விபத்தான விமானத்தை மும்பபையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்துக்கு விற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.   ‘அலகாபாத்தில் ஏற்பட்ட ஒரு விபத்துக்குப் பிறகு தான், இந்த விமானம் விற்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்பட்டது’ என்று உத்தர பிரதேச அரசு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இந்த சிறிய ரக விமானத்தில் 10 பேர் வரை அமர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   விபத்து நடந்ததை அடுத்து, ஏராளமான போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர போராடிக் கொண்டிருக்கின்றனர்.    
More News >>