சிம்புவை வைத்து இயக்கும் வெங்கட் பிரபு
நடிகர் சிம்பு தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படம் வேகமாக வளர்ந்து வருகிறது. வெகு விரைவில் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிம்பு அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தை இயக்க போகிறவர் வெங்கட் பிரபு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தை 2019ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும் படத்தில் இணையும் சக நடிகர்கள், டெக்னிசியன்ஸ், படத்தலைப்பு, பர்ஸ்ட் லுக் என அனைத்தும் விரைவில் வெளியிடப்படும் என்று வெங்கட் பிரபு கூறினார்.
கதைக்களம் குறித்து வெங்கட் பிரபு, சில மாதம் முன்பு வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா, சிம்பு என பிரபல கூட்டணியுடன் இணைந்து பில்லா-3 என்ற படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தன. தற்போது சிம்புவுடன் இணையும் புதிய திரைப்படம் தான் பில்லா-3யா என்ற கேள்வியும் எழுந்தன. ஆனால் அதற்கு வெங்கட் பிரபு இது ஒரு புதுமையான கதைக்களம் கொண்டதாக இருக்கும் என்று பதில் கூறினார்.
முன்னதாக சிம்பு, துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேனுடன் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு விடிவி-2 மற்றும் சிம்பு இயக்கி நடிக்க போகும் ஒரு திரைப்படம் என அடுத்த கட்ட படங்களில் பிசியாகிவிட்டார்.