வாயை பிளக்க வைத்த பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு !
2014ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்ற மோடி பல்வேறு நாடுகளுக்கு நட்பு ரீதியாகவும் மற்றும் அரசியல் ரீதியாகவும் பயணங்கள் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு ஒப்பந்தங்கள், வெளிநாட்டு முதலீடுகள் பெறவும் இந்த பயணங்கள் உதவின.
மோடியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து பல்வேறு கட்சியினர் அவ்வப்போது விமர்சித்தும் வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு செய்யப்பட்ட செலவுகள் எவ்வளவு என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளார் பீம்ப்பா என்ற ஒருவர்.
அதற்கு பதில் அளித்துள்ளது பிரதமர் அலுவலகம். அதில், கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி, 41 முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார், மொத்தம் 52 நாடுகளுக்கு சென்றுள்ளார்.
பூடான், பிரேசில், இலங்கை, நேபாளம், ஜப்பான், ஜோர்டான், பாலஸ்தீனம், முதல் இந்தோனேஷியா வரை மொத்தம் மேற்கொண்ட 52 நாடுகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு பயணம் மேற்கொண்ட போது ஆனா செலவு மொத்தம் சுமார் 355 கோடி ஆகும். இதில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்களில் பயணம் செய்ததால் அந்த செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை.
2015ம் ஆண்டு பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகளுக்கு செய்யப்பட்ட செலவுகள் தான் மிக அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மிக குறைந்த செலவாக பூடான் பயணம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த தகவல்கள் அனைத்தும் வெளிநாட்டு பயணங்களை மட்டுமே குறிக்கிறது. உள்நாட்டு பயணங்களுக்கு எவ்வளவு என்றும், பாதுகாப்புக்கு எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது குறித்து குறிப்பிடவில்லை.
கூடுதல் தகவல்களாக பாதுகாப்பு செலவு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, ஆகையால் பாதுகாப்பிற்கு எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது என்ற தகவ்களை யார் நினைத்தாலும் தெரிந்துகொள்ளமுடியாது.