பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது!
தமிழகத்தில் இருக்குப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஏதுவாக இருக்கும் டி.என்.இ.ஏ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் (மற்றும் கீழ் இயங்கும் கல்லூரிகள்), அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுய நிதியில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் சமர்பிக்கப்படும் சீட்கள் ஆகியவற்றுக்கு டி.என்.இ.ஏ அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான டி.என்.இ.ஏ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. +2-வில் மாணவர்கள் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் படிப்புகளில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் வாரம் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. 5 சுற்றுகளில் இந்த ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் 5 நாட்களுக்கு நடைபெறும்.
முதல் மூன்று நாட்களுக்கு விருப்பத்திற்குறிய கல்லூரி மற்றும் படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கும், கடைசி இரண்டு நாட்கள் கல்லூரியை முடிவு செய்வதற்கும் ஒதுக்கப்படும். தமிழகத்தில் இந்த ஆண்டு, 91.1 சதவிகிதத்தினர் +2-வில் தேர்ச்சி பெற்றனர்.