மன்சூர் அலிகான், நடிகை நிலானி ஜாமீனில் விடுவிப்பு!
நடிகர் மன்சூர் அலிகான், மற்றும் நடிகை நிலானி ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
பசுமை வழிச்சாலைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஜாமீன் கோரி அவர் தொடர்ந்த வழக்கு சேலம் மாவட்டம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமின் வழங்கியதை தொடர்ந்து, சேலம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதேபோல், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டை கண்டித்து போலீசார் உடையில் வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிலானிக்கும் ஜாமீன் கிடைத்தது.
இதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகை நிலானி விடுதலை செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றம் மற்றும் வடபழனி காவல்நிலையத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு நிலானிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.