காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள் மூன்று பேரை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு&காஷ்மீர் மாநிலம் குப்வாரா மற்றும் பந்திபோரா மாவட்டங்களில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால், பாக்தோர் எல்லை கோட்டுப்பகுதியில் உள்ள ராணுவ முகாம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கிருந்த 3 ராணுன வீரர்களும் பணியில் சிக்கினர்.
குப்வாரா மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மற்ற இரண்டு ராணுவ வீரர்கள் மலையிலிருந்து தவறி விழுந்தனர். அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு உள்ளனர். கடும் பனிப்பொழிவு இருந்து வரும் நிலையிலும், அதை பொருட்படுத்தாமல் நான்காம் நாளான இன்றும் ராணுவ குழு மற்றும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்களுடன், விமான படை ஹெலிகாப்டர் ஒன்றும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்நிலையில், பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன 3 ராணுவ வீரர்களையும் கலோ பகுதியில் இருந்து உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இருப்பினும், மலையிலிருந்து தவறி விழுந்த இரு வீரர்களும் காணாமல் போய் மூன்று நாட்கள் ஆகியும் கிடைக்காததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.