உலகிலேயே பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிக்கு 7வது இடம்
உலகிலேயே பணக்கார குடும்பங்களின் பட்டியலில் அம்பானி குடும்பத்திற்கு 7வது இடம் கிடைத்துள்ளது.
உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியல் குறித்து தனியார் அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தியது. இதில், உலகளவில் உள்ள பணக்காரர் குடும்பங்களின் பட்டியலை அந்நிறுவனம் ஆய்வு செய்தது. இதில், மொத்தம் 25 பணக்கார குடும்பங்களின் பட்டிய¬ல் இந்நிறுவனம் வெளியிட்டது.
இந்த பட்டியலில், வால்மார்ட் நிறுவன்த்தின் உரிமையாளர் வால்டன் முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து, இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி 7வது இடத்தில் உள்ளார். அதாவது, முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு 43.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹையத் ஓட்டல் உரிமையாளர் 15வது இடத்திலும், சாம்சங் உரிமையாளர் லீ 16வது இடத்திலும் உள்ளனர்.