இந்தோனேஷியாவில் ஆகங் எரிமலை சீற்றம்!
இந்தோனேஷியாவின் பாலி நகரில் உள்ள ஆகங் எரிமலையில் இருந்து சாம்பல் வெளியேறிவருவதால் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.
இந்தோனேஷியாவில் உள்ள ஆகங் எரிமலையில் இருந்து 8,200 அடி உயரத்திற்கு சாம்பல் புகை பரவியது. இதனைத் தொடர்ந்து இந்த புகை நெருப்புடன் வெளியேறிவருகின்றது.
இந்நிலையில், சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. இதனால், 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எரிமலை சாம்பல் வழியே விமானங்கள் பறந்து சென்றால் விமான இயந்திரங்கள் பாதிப்படையும். எரிபொருள் மற்றும் குளிர்விக்கும் சாதனங்கள் தடைபடக் கூடும்.
மேலும், தெளிவற்ற பார்வை நிலையும் ஏற்படும் என்பதால் விமானங்கள் இந்த வழியே பறப்பது தவிர்க்கப்படுவதாக கூறப்படுகின்றது. எரிமலை சீற்றத்தால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.