ஆகாஷ் அம்பானி - ஷ்லோகாவின் நிச்சயதார்த்த விழா
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில், பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
பணக்காரர்கள் பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி. இவருக்கு தனது பள்ளித் தோழியான ஷ்லோகா மேத்தாவுடன் காதல் ஏற்பட்டது. இதன் பிறகு, இருவீட்டாரின் சம்மதத்துடன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்த விழா நேற்று (28.6.2018) நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், நேற்று ஆகாஷ் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழ் மட்டும் ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த விழாவில், பாலிவுட் பிரபலங்களான நடிகர் ஷாருக்கான், அவரது மனைவி கவுரி கான் மற்றும் நடிகை ஆலியா பட், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.