அமெரிக்க செய்தி நிறுவனத்தில் பயங்கர துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி
அமெரிக்காவில் உள்ள செய்தி நிறுவன அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவினவ் மேரிலேண்ட் மாகாணத்தில் அன்னபோலிஸ் பகுதியில் தி கேப்பிடல் கெஜட் என்ற செய்தி நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று திடீரென நுழைந்த மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், அங்கு வந்து துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை கைது செய்துள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.