ஆட்சியை அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாமே - ப.சிதம்பரம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் போதும் என்றால், அமைச்சர்கள் பதவி விலகி, அதிகாரிகளிடம் ஆட்சியை ஒப்படைக்கலாமே என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவி காலத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், "மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி மீது நம்பிக்கை இல்லையென்றால், தமிழ்நாடு அரசில் ஏன் அமைச்சர்கள் இருக்க வேண்டும். அமைச்சர்கள் பதவி விலகி விட்டு, அதிகாரிகளிடம் ஆட்சியை ஒப்படைக்கலாமே" எனக் குறிப்பிட்டுள்ளார்.

More News >>