உலகளவில் 90 % கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட இந்தியா: ஆய்வில் தகவல்
உலகில் உள்ள 100 கோடி ரசிகர்களில் 90 சதவீதம் பேர் இந்திய ரசிகர்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
விளையாட்டு போட்டிகளில் கால்பந்துக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் போட்டி மட்டுமே. உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் கிரிக்கெட் ரசிகர்களாக உள்ளனர். உலகம் முழுவதும் இந்திய அணி நட்சத்திர வீரர்களுக்கும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
இதற்கு முக்கிய காரணமாக கிரிக்கெட் விளையாட்டில் டி-20 என்று ஒரு புதுமையான லீக் போட்டிகளால் மட்டுமே என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் டி -20 போட்டிகள் அறிமுகமான பின்பு டெஸ்ட் போட்டிகளுக்கான ரசிகர்கள் ஆதரவு குறைந்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். போட்டிகள் தான் உலகில் மிக பிரபலமான லீக் போட்டியாகும். உலகத்தில் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்று சீனா மற்றும் அமெரிக்காவில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தியது.
இந்த ஆய்வின் முடிவாக கிரிக்கெட் விளையாட்டிற்கு உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் உள்ளனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு பெண் ரசிகர்களும் அதிகமாக உள்ளனர். இதற்கும் முக்கிய காரணமாக ஐ.பி.எல் போட்டிகளை அறிமுகப்படுத்தியதே என்று கூறப்படுகிறது.