பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொலை!- ட்ரம்ப் வருத்தம்

அமெரிக்காவில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றில் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பத்திரிகையாளர்களில் ஐந்து பேரை சரிமாரியாக சுட்டு கொன்றுள்ளான். இதையடுத்து அமெரிக்காவின் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

மேரிலாண்டில் உள்ள அன்னாபோலிஸ் நகரத்தில் வெளியாகும் அத்தனை தினசரிகளிலும், “தலைநகரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஐவர்” என்ற தலைப்பில் செய்தித்தாள்கள் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு செய்தித்தாளிலும் ஆசிரியர் பக்கத்தில் ‘நாங்கள் பேச்சற்றுக் கிடக்கிறோம்’ என்பதைக் கூறும் வகையில் செய்தித்தாளின் நடுப்பக்கம் வெள்ளைப் பக்கமாக காலியாக விடப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் மீது நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது என ஒட்டுமொத்த பத்திரிகை உலகமும் கண்டனங்களைத் தெரிவித்தும் பதிப்பித்தும் உள்ளது.

38 வயதான ஜெராட் ராமோஸ் என்ற நபர் தான் இப்படுகொலைகளுக்குக் காரணமான குற்றவாளியாக நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். ஆனால், காவல்துறை இச்சம்பவம் குறித்தும் இதன் பின்னணி குறித்தும் தீர்க்கமான ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

மரணமடைந்த ஐவர் குடும்பத்தாருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ஆழ்ந்த இரங்கலை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

More News >>