தமிழிசை செளந்திரராஜனின் தலைவர் பதவிக்கு வேட்டு?

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை, அப்பதவியிலிருந்து நீக்கப் போவதாக ஒரு தகவல் பரவலாகி வருகிறது.

பாஜக-வின் தமிழகத் தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் செயல்பட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தமிழிசை பேசுகையில், ‘கமல்ஹாசன் தொடங்கிய ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் என்னை இணைத்திருப்பதாக மின்னஞ்சல் வந்திருக்கிறது. எனக்கு உறுப்பினர் எண் கூட அனுப்பியிருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்திடம் இருக்கும் அனைத்து மின்னஞ்சலுக்கும் இதைப் போன்ற உறுப்பினர் சேர்க்கையை அனுப்பிவிடுவார்கள் போல் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் வெற்றிடத்தை கமல்ஹாசனால் நிரப்ப முடியாது’ என்று கூறினார்.

இதற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தமிழிசையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து, உறுப்பினராக சேர்த்துக் கொள்ளுமாறு அழைப்பு வந்ததற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. மேலும், உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உறுப்பினர் சேர்க்கையிலிருந்து வெளியேறுவதற்கும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது’ என விளக்கம் அளிக்கப்பட்டது.

இது தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக பாஜக-வின் செயலாளர் முரளிதர் ராவ், தேசிய பாஜக தலைமைக்கு, ‘தமிழிசயைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குங்கள்’ என்று சிபாரிசு செய்ததாக ஒரு தகவல் கூறப்பட்டது. ஆனால், இது வெறும் ஊடகங்களின் புரளி என முரளிதர் ராவ் விளக்கமளித்துள்ளார்.

More News >>