தொடரும் குழந்தைகள் கொலைகள்: புரளியால் கொலை செய்யப்பட்ட வாலிபர்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிப்புராவின், முரபாரி மாவட்டத்தில் குழந்தை கடத்துபவர் என்று சந்தேகிக்கப்பட்டு ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திரிபுராவில் கடந்த செவ்வாய் கிழமை 4 ஆம் வகுப்புப் படிக்கும் சிறுவன், கொலை செய்யப்பட்டிருந்தான். அதைப் போலவே மோஹன்பூர் பகுதியில் 11 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டான்.

இந்தக் கொலைக்கு யார் காரணம் என்று இதுவரை தெரியாத நிலையில், உத்தர பிரதேசத்திலிருந்து திரிபுராவுக்கு வந்து தங்கியிருக்கும் மூவர் தான் குழந்தை கடத்துபவர்கள் என்று வதந்தி பரவி உள்ளது. இதை நம்பி உ.பி-யைச் சேர்ந்த ஜாகிர் கான், குல்சார் மற்றும் குர்ஷித் கான் ஆகியோரை குறி வைத்து ஒரு ஆக்ரோஷமான கும்பல், தடுக்க வந்த காவலர்களையும் தாக்கிவிட்டு மூவரையும் கொடூரமாக அடித்துள்ளது. இதனால், ஜாகிர் கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குல்சார் மற்றும் குர்ஷித் கான் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கின்றனர்.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஸ்மிருதி ரஞ்சன் தாஸ் , ‘பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ஆனால் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கும்பலில் இருந்ததால், பாதுகாப்புப் படையால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. மேலும், தப்பி வந்த மூவரில் ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்’ என்று கூறினார். இந்த சம்பவத்தை அடுத்து மாநில போலீஸின் தலைவர் ஏ.கே.சுக்லா, மேலும் வதந்திகள் பரவாமல் இருக்க குறுஞ்செய்தி மற்றும் இணைய சேவையை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

 

More News >>