ஜி.எஸ்.டி முதலாமாண்டு விழா: பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

தொடர்ந்து ஐந்தாவது நாளாக எவ்வித மாற்றமும் பெட்ரோல், டீசல் விலையில் செய்யப்படாமல் உள்ளது.

ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு அன்றைய நாளின் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 

இன்று அமலான விலைப்பட்டியல் அடிப்படையில் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75.55 ரூபாய் ஆகவும், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 78.23 ரூபாய் ஆகவும், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 83.06 ரூபாய் ஆகவும், சென்னையில் 78.40 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்ப்டையிலேயே இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதேபோல், டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை 67.38 ரூபாய் ஆகவும், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் டீசல் விலை 69.93 ரூபாய் ஆகவும், மும்பையில் ஒரு லிட்டர் டீசல் விலை 71.49 ரூபாய் ஆகவும், சென்னையில் 71.12 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் விற்கப்படுகிறது.

More News >>