இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பசலனம் காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் பகல் முழுவதுமே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழகத்தில் ஆங்காங்கே இரவு நேரங்களில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் கடலில் 35-45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடலோரப் பகுதிகளில் காற்றின் விசை அதிகமாக இருப்பதால் தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து அறிவுறுத்தியுள்ளது.

More News >>